தமிழ் மக்கள் கருத்தறிந்தே இறுதித் தீர்வு முன்வைக்கப்படும்! சம்பந்தன் திட்டவட்டம்....
எமது மக்களை நாம் ஒரு போதும் கைவிடமாட்டோம். ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை ஏற்கப்போவதும் இல்லை. தயாரிக்கப்படும் இறுதித் தீர்வு, தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்டு ஆலோசனை பெறப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
"இந்த நாட்டில் பல சந் தர்ப்பங்களை இழந்துள்ளோம். இவ்வாறு இழந்தது சுதந்திரத்துக்கு முன், பின் என்பதோடு, ஆயுதப் போராட்ட காலத்திலும் இழந்துள்ளோம். ஜே.ஆர். காலத்தில் 1978 ஆம் ஆண்டு ஆட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால், சந்திரிகா அரசில் இருக்கவில்லை. அதன் பின்பு தற்போது 38 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் பெரும்பான்மை உண்டு. இவ்வாறு பெரும்பான்மை உண்டு என்பதற்காக, தரப்படும் ஒரு தீர்வை ஏற்கப்போவதில்லை. இதனையும் மனதில் வைத்து, எமது மக்களின் தேவை - அபிலாஷை - உணர்வுக்குப் பொருத்தமான கருத்துக்கள் - ஆலோசனைகள் சகல தரப்பிடம் இருந்தும் பெறப்படும்.
அனைவரும் தமது கருத்தைச் சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு வரும் கருத்து மூலம் தயாரிக்கப்படும் தீர்வு மக்கள் முன்வைக்கப்பட்டு ஆலோசனை பெறப்படும். அதன் பின்பு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக அரசியல் தீர்வு அமையப் பாடுபடுவோம் என்றார்.
தமிழ் மக்கள் கருத்தறிந்தே இறுதித் தீர்வு முன்வைக்கப்படும்! சம்பந்தன் திட்டவட்டம்....
Reviewed by Author
on
April 17, 2016
Rating:
Reviewed by Author
on
April 17, 2016
Rating:


No comments:
Post a Comment