ஒரு ஆண்டு கடந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத நேபாளம்!
கடந்த ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 8,000 போ் உயிரிழந்தனர். 21,000-கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். மேலும் கணக்கிட முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டன என்பது உலகறிந்ததே.
இத்துயர சம்பவம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது நேபாளத்தில் இடம்பெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேபாள தலைநகா் காத்மண்டு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது, அப்பகுதிக்கு அடையாளமான விற்பனையாளார்கள் தற்போது திரும்பி உள்ளனா், மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடங்கியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
காத்மண்டுவில் உள்ள யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை புனரமைக்கும் பணிகள் மெதுவாக ஆரம்பமாகியுள்ளது .
இந்நிலநடுக்கத்தில் சேதமடைந்த பூதாநாத் கோயிலை மறுசீரமைக்கும் பணிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கொடுத்து உதவிவுள்ளனா், இதனால் அக்கோயிலை மறுசீரமைக்கும் பணிகள் மட்டும் விரைவாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும், காத்மண்டுவில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹொட்டலின் மூலம் ஏழை பணக்காரர்களுக்கு இடையேயான வித்தியாசம் விளக்கப்பட்டுள்ளது.
ஹயாத் ஹொட்டலுக்கு அருகே பத்து அடி இடைவெளியில் உள்பகுதியில், இன்னும் நிலநடுக்கத்தினால் வீடுகளை இழந்த மக்கள் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்ற நிலை உள்ளது.
சொகுசு வாகனங்களில் ஹொட்டலுக்கு வருபவர்கள், அங்கு சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆனால், பணம் இல்லாத ஏழைகள் இன்னும் தங்க வீடின்றி கூடராத்தில் வாழும் சூழ்நிலையே இங்கு நிலவுகின்றது.
நிலநடுக்கத்தினால் தகர்ந்த ஒரு கோபுரம் இன்னும் அதே நிலையிலே உள்ளது.
நேபாளத்தின் இலாபகரமான வணிகமாக திகழ்ந்து வந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதல், பாதுகாப்பு காரணம் கருதி முழுமையாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு கடந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத நேபாளம்!
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment