நியூ மன்னார் இணையத்திற்கு மேலும் இரண்டு விருதுகள்....
துரையம்மா அன்பகமானது தனது 09வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5-00 மணியளவில் நடை பெற்ற நிகழ்வில்.......
நியூ மன்னார் இணையத்திற்கு மேலும் இரண்டு விருதுகள்.....
மன்னார் மாவட்டத்தின் பிரதிநியாக மன்னார் மக்கள் கலைஞர்கள் என தனது சேவையை மன்னாரில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் இனம்-மதம்-மொழி பாகுபாடின்றி பாடசாலை நிகழ்வுகள் புனிதத்தலங்கள் சமய நிகழ்வுகள் கல்வி விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகள் என அத்தனையும் உடனுக்குடன் வெளிப்படுத்தும் இணையமாக உள்ளது எமது நியூ மன்னார் இணையம்.
மன்னாரின் வளர்ச்சி மக்களின் எழுச்சி இரண்டையும் உள்வாங்கி உடனுக்குடன் செய்திகளையும் தகவல்களையும் வழங்கி வருகின்ற எங்களின் சேவையை பாராட்டி சைவக்கலை இலக்கிய மன்றத்தினரால் கடந்த விருது வழங்கி கெரவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே…
இப்போது இன்னுமோர் துரையம்மா அன்பக அமைப்பினரால் எமது சேவையினை பாராட்டி எமது நியூ மன்னார் இணையத்திற்கும் மன்னார் மாவட்ட இணைப்பாளருக்கும் என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதானது எமக்கு மகழ்ச்சியோடு இன்னும் எமது சேவையினை விஸ்தரிக்கவேண்டிய தேவையும் கடமையினையும் காட்டி நிற்கின்றது.
இவ்வாறான விருதுகள் எமக்கு கிடைக்கும் போது எமது சேவை இன்னும் தேவை என்பதோடு நாம் படிப்படியாக காணுகின்ற இந்த வெற்றியானது வாசகராகிய உங்கள் ஒவ்வொருவரையுமே சாரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை........
உங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவு எங்களோடு இருக்கும் வரை நாம் ஜெயிப்போம் மன்னார் ஜெயிக்கும்.
முன்மாதிரியாக இருப்போம் என்றும் தங்களின் சேவையில் நியூ மன்னார் இணையகுழுமத்தார்.
நியூ மன்னார் இணையத்திற்கு மேலும் இரண்டு விருதுகள்....
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment