எதிர்க்கட்சித் தலைவர் பலவந்தமாக முகாமிற்குள் நுழையவில்லை!- இராணுவப் பேச்சாளர்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் பலவந்தமாக நுழையவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் பலவந்தமாக முகாமிற்கு வரவில்லை என்பதுடன் முன்கூட்டியே அறிவிக்காது அவர் முகாமுக்கு வந்துள்ளார். இதனால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் உள்ள கஜபா படைப் பிரிவின் தலைமையகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக இராணுவத்தின் கிளிநொச்சி கட்டளைத் தளபதி கமல் கருணாசேகர, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பிராங்க்ளின் பெர்னாண்டோவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவர் பலவந்தமாக முகாமிற்குள் நுழையவில்லை!- இராணுவப் பேச்சாளர்
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment