அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தேசிய தமிழ் சிங்கள புத்தாண்டு விழா.(படம்)


தேசிய தமிழ் சிங்கள புத்தாண்டு விழா இன்று சனிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேசச்செயலகங்கள், பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஏற்பட்டில்,அரச,அரச சார்பாற்ற நிறுவனங்களின் அனுசரனையுடன் இன்று சனிக்கிழமை மன்னாரில் தமிழ்,சிங்கள புத்தாண்டு விழா மிக சிறப்பாக இடம் பெற்றது.

-மன்னார் மாவட்டச் செயலகத்தின் திறந்த வெளி அரங்களில் பல்வேறு நிகழ்வகள் இடம் பெற்றது.

நேற்று காலை வீதி ஓட்டப்போட்டிகள் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து திருக்கேதீஸ்வர சந்தியில் இருந்து மரதன் ஓட்டப்போட்டி இடம் பெற்றது.

மேலும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் திறந்த வெளி அரங்களில் முட்டி உடைத்தல், தலையணைச்சண்டை, கிறிஸ்மரம் ஏறல்,கிளித்தட்டு,கயிறு இழுத்தல்,தேங்காய் துருவல்,சங்கீத கதிரை,அழகு ராணி போட்டி,பணிஸ் சாப்பிடுதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த நிழ்வில் விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,மாவட்டச் செயலக அலுவலகர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-




















மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தேசிய தமிழ் சிங்கள புத்தாண்டு விழா.(படம்) Reviewed by Author on April 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.