மன்னார் ஆடைத்தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் திடீர் விஜயம்.(படம்)
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் இன்று (23-04-2016) சனிக்கிழமை மதியம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்று ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற பெண்களுடன் கலந்துரையாடினர்.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற பெண்கள் தாம் அங்கு எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்,தமக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என கோரி கடந்த 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் முன்வைத்த வாக்குருதிகளுக்கு அமைவாக குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் குறித்த பெண்கள் மீண்டும் தமது கடமைக்குச் சென்றனர்.
இந்த நிலையில் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் இன்று சனிக்கிழமை மதியம் மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட நிலையில் அங்கு கடiமாற்றும் பெண் ஊழியர்களுடன் நீண்ட நேரம் கலந்தரையாடிய தோடு, குறித்த ஆடைத்தொழிற்சாலையின் முகாமைத்துவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரும் சென்றிருந்தனர்.
கடந்த 8 ஆம் திகதி குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒரு சில பெண் ஊழியர்கள் அடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து சில பெண் ஊழியர்கள் தமது சுய விருப்பத்தின் பெயரில் இடை விலகியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மன்னார் நிருபர்...
மன்னார் ஆடைத்தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் திடீர் விஜயம்.(படம்)
Reviewed by Author
on
April 24, 2016
Rating:

No comments:
Post a Comment