மூன்று நாட்களாக திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த மீனவர் ஒருவர், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினை சேர்ந்தவர் லுயிகி மார்கியூஸ். 56 வயதான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாக மாயமானார். இதனை தொடர்ந்து உறவினர்கள் புகார் அளிக்கவே, கடற்கடை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிவந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் கடலில் விழுந்து மரணமடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ராட்சத திமிங்கலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "72 மணி நேரமாக திமிங்கலத்தின் வயிற்றில் உயிருடன் இருந்தது ஆச்சர்யமான நிகழ்வு. எனது கடிகாரத்தில் இருந்த வெளிச்சத்தின் மூலம் திமிங்கல கழிவுகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன், அதன் நாற்றம் தாங்க முடியவில்லை. இது உண்மையிலேயே மிக அதிசயமான நிகழ்வு தான். நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்" என தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களாக திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த மீனவர் ஒருவர், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Reviewed by Author
on
April 07, 2016
Rating:

No comments:
Post a Comment