அண்மைய செய்திகள்

recent
-

உலக நாடுகள் பல இராணுவ பலத்தை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் : அதிர்ச்சி தகவல்..!


உலக நாடுகள் இராணுவத்திற்கு அதிக அளவில் செலவு செய்வதாக ஸ்டாக்கோமை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான ‘சிப்ரி’ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டை விட தற்போது இராணுவத்திற்கு அதிக அளவில் செலவு செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதாம். உலககில் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம், ஏமனில் சௌதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல், சௌதி அரேபியாவில் ஈரானின் அச்சுறுத்தல்கள், தென் சீனக்கடலில் சீன இராணுவப்படையின் விரிவாக்கம், கிரிமியா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் ரஷ்ய ராணுவத்தின்

நடவடிக்கைகள், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான வான்வெளித் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பல நாடுகள் தமது இராணுவ பலத்தை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ‘சிப்ரி’ தகவள் வெளியிட்டுள்ளது. சீனா (215 பில்லியன் டொலர்கள்) சௌதி அரேபியா (87.2 பில்லியன் டொலர்கள்), ஈராக் (13.1 பில்லியன் டொலர்கள்) பணத்தையும் இராணுவத்திற்காக செலவிடுகிறதாம். மேலும் குறிப்பாக, அமெரிக்கா இராணுவத்திற்காக மட்டும் 596 பில்லியன் டொலர்களை செலவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகள் பல இராணுவ பலத்தை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் : அதிர்ச்சி தகவல்..! Reviewed by Author on April 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.