புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும் கிடையாது.
மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது என நம்புகின்றோம்.
புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால் மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment