அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தில் 'வெட்டுக்கிளி'யின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை.-Photos


வன்னி மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாயச் செய்கைகள் 'வெட்டுக்கிளியின்' தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பாதீக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாய நடவடிக்கைகளில் 'வெட்டுக்கிளியின்' தாக்கம் அதிகரித்த நிலை காணப்பட்டமையினால் வன்னி மாவட்ட விவசயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு,விவசாய நடவடிக்கைகளும் பாதீப்படைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் பாதீக்கப்பட்ட விவசாயிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

-இந்த நிலையில் பாதீக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்கமாறு ஜனாதிபதி செயலகம்,பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் வன்னி மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதீக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஸ்டம் தொடர்பாகவே உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக பாதீக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈட்டை பெற்றுக்கொடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.




வன்னி மாவட்டத்தில் 'வெட்டுக்கிளி'யின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை.-Photos Reviewed by NEWMANNAR on April 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.