மன்னாரின் மகிமை பேசுகின்ற விளையாட்டு வீரர்களை கௌரவித்தல் வேண்டும்---விண்ணப்பம் கையளிப்பு,,,,
மன்னாரின் மகிமை பேசுகின்ற விளையாட்டு வீரர்களை கௌரவித்தல் வேண்டும்---விண்ணப்பம் கையளிப்பு,,,,
எமது மன்னார் மாவட்டத்தின் தூண்களான அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேசசெயலாளர் உள்ளுராட்சியாணையாளர்....
M,Y,S.தேசப்பிரிய அரசாங்க அதிபர்
A. ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர்
K.S.வசந்தகுமார் பிரதேச செயலாளர்
M,A,J. துரம் பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையளர்
03 அம்சகோரிக்கை உள்ளடக்கிய விண்ணப்பம் இதோ உங்களுக்காக....
வளமான மாண்புறு மன்னார் மாவட்டத்தின் மதிப்பிற்குரிய கௌரவத்திற்குரிய அதிகாரிகளின் கவனத்திற்கு………….
மன்னாரின் மகிமை பேசுகின்ற விளையாட்டு வீரர்களை கௌரவித்தல் வேண்டும் வருடா வருடம் விளையாட்டு விழா நடாத்தப்படவேண்டும். “மன்னார் மாவட்ட விளையாட்டு சம்மேளனம்” ஒன்றை உருவாக்க வேண்டும்.....................................................................................
என்பதற்காவே தங்களுக்கு இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன்…..
மற்றவர்களின் பார்வையில் மன்னார் பின்தங்கிய வறுமையான வெப்பம் அதிகமான மாவட்டமாக இருக்கலாம் உற்றவர்கள் என்ற அடிப்படையில் எல்லாவற்றிலும் வளமானதும் சிறப்பானதும் எமது மன்னார் மாவட்டமே பெற்ற தாய்க்கு தன்பிள்ளைபோல்….
விளைநிலமும் விசுவாசவாழ்வும் விளையாட்டிலும் கல்வியிலும் மற்ற மாவட்டங்களை விஞ்சி நிற்பது எமது மன்னார் மாவட்டமே இதற்கு சான்றாக பல விடையங்கள் உள்ளது நான் இங்கே தங்களிடம் வேண்டிக்கொள்வது என்ன வென்றால்
உதைபந்தாட்டத்தில் “குட்டி பிரேசில் என வர்ணிக்கப்படும் மன்னார் மாவட்டத்தில்” உள்ள விளையாட்டு வீரர்களை ஏன் 2007 ம் ஆண்டிற்கு பிறகு மன்னார் மாவட்டம் கௌரவப்படத்தாமல் ஊக்குவிக்காமல் இருக்கின்றது.
சாதித்த விடையங்களைப்பற்றி நான் பேச வரவில்லை இன்னும் எமது வீரர்களால் சாதிக்கப்படவேண்டிய விடையங்களைப்பற்றி பேசவருகின்றேன்
உதைபந்தாட்ட சங்கம்---1972
வலைபந்தாட்டம் சங்கம்---18-08-2001
மெய்வல்லுநர் சங்கம் ---13-01-2001
கபடி சங்கம் ---23-02-2005
கிறிக்கெட் சங்கம் ---02-04-1988
கரப்பந்தாட்ட சங்கம்--- 1993
விளையாட்டுத்துறையில் இவ்வளவு சங்கங்கள் இருந்தும் இவையனைத்தும் ஒழுங்காக இயங்குகின்றதா என்பது------?????
50 வருடங்களில் பின் வீரர்களை கௌரவிக்க எடுத்த முயற்சி தான் 2007ம் ஆண்டு “விளையாட்டுத்துறையில் மன்னார் மாவட்டம்” எனும் நூல் வெளியீடும் கௌரவமும் அதன் பிற்பாடு இன்று வரை எந்த விளையாட்டு வீரவீராங்கனைகளோ…. பயிற்றுவிப்பாளர்களோ விளையாட்டு அதிகாரிகளோ கௌரவிக்கப்படவும் இல்லை கண்டு கொள்ளவும் இல்லை ஏன் என்ன காரணம் இப்படியே தொடர்ந்தால் விளையாட்டுத்துறை என்னாகும் சற்று சிந்தித்துப்பாருங்கள்….
ஏன் எமது வீரர்களை கௌரவிக்கவேண்டும்…..?
எமது வீரவீராங்கனைகள் மற்ற மாவட்டங்களைப்போல எல்ல வசதிகளோடு இருந்து கொண்டு இவ்வாறான சாதனைகளை படைக்கவில்லை 25 ஆண்காலத்திற்கு மேல் போர்ச்சு10ழல் வறுமை-விளையாட்டுப்பயிற்சிக்கு வசதியின்மை பொருளாதார சு10ழ்நிலை சமூகப்பிரச்சினைகள் உளவியல் தாக்கங்கள் ஏளனவார்த்தைகள் இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத துன்ப வேதனைகள் தாங்கி தமது திறமையை வெளிக்காட்டி பெற்றுக்கொண்ட வெற்றிகள் ஏராளம் இவர்களின் திறமைக்கும் தியாக சிந்;தைக்கும் நாம் செய்யக்கூடிய செயல் என்றால் எமது மண்ணிற்கு பெருமை சேரக்கும் இச்செல்வங்களை வாழ்த்தி வரவேற்று கௌரவிப்பதே எமது தலையான கடமையாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் எமது இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதாகவும் இன்னும் இன்னும் மன்னார் மாவட்டம் பல சாதனைகளைப்படைக்க ஊந்து சக்தியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
எமது மாவட்டத்திற்கு விளையாட்டுத்துறையில் தேவையான விடையங்கள்----
சகல வசதிகளுடன் 400 மீட்டர் மைதானம் தேவை
நீச்சல் தடாகம் தேவை
சிறந்த பயிறிறுவிப்பாளர்கள் தேவை
உடல் வலுவூட்டல் நிலையம் தேவை
உள்ளகவிளையாட்டரங்கிற்கு சிறந்த முறையில் இயங்குவதோடு சிறந்த பயிற்சியும் தேவை.
சர்வதேச மைதானம் சிக்கலில்…….
விளையாட்டு அபிவிருத்திக்கு தேவையான விடையங்கள்….
விளையாட்டு நிர்வாகம்
பயிற்சிகளும் கருத்தரங்குகளும்
போட்டிகள் ஒழுங்கமைப்பு
மைதானமும் உபகரணமும்
ஊக்குவிப்பும் பரிசில்களும்
வைத்திய சேவைகள்
விளையாட்டுக்களாக…..
உதைபந்து-கரப்பந்து-வலைப்பந்து -கூடைப்பந்து -பூப்பந்து -மேசைப்பந்து மெய்வல்லுநர் -கிறிக்கெட் -கபடி -மரதன் -சைக்கிளோட்டம் இவற்றோடு கராத்தே நீச்சல் போட்டிகள் சிலம்பு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். குறிப்பாக உதைபந்துக்கும் கிறிக்கெட்விளையாட்டுக்கும் தான் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஏனைய விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்
எமது மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 பிரதேசசெயலங்களிளும் உள்ள அனைத்து விளையாட்டுக்கழகங்கள் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றினைத்து வலுவான “மன்னார் மாவட்ட விளையாட்டு சம்மேளனம்” ஒன்றை உருவாக்க வேண்டும்.
எமது மாவட்டத்தில் எல்லா விளையாட்டிலும் உதைபந்து மற்றும் கராத்தேயில் தேசிய வீரர்கள் இருப்பது போல் ஏனைய விளையாட்டிலும் தேசிய வீரர்கள் இருக்க வேண்டும் அதற்கு நகரப்பகுதிக்குள் நிற்காமல் கிராமப்பகுதிகளுக்கும் சென்று திறமையான வீரவீராங்கனைகளை இனங்கண்டு இணைத்துக்கொள்ளவேண்டும்.
எமது மன்னார் மாவட்டமானது வருமானத்திலும் வசதியிலும் குறைந்த மாவட்டமாக இருக்கலாம் ஆனால் வளமான வீரவீராங்கனைகளால் நிறைந்த மாவட்டமாகும்.
கடந்த காலங்களை நாம் கதைத்துக்கொண்டிருப்பததைவிட்டு தற்போது மன்னார் மாவட்டம் சகல வழிகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. வளங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிராமல் இருக்கின்ற வளங்களை வைத்து வீரவீரங்கனைகளை வளப்படுத்த விளையாட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்கள் விளையாட்டுக்கழகங்கள் அமைப்புக்கள் அதிகாரிகள் இனம்-மதம்-மொழி கடந்து வேற்றுமை களைந்து ஓரணியில் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அதற்கு எமது மன்னார் மாவட்டத்தின் தூண்களான அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளுராட்சியாணையாளர் பிரதேசசெயலாளர் ஒத்துழைப்பு வழங்கினால் விளையாட்டு அதிகாரிகள் விளையாட்டு அமைச்சிடம் இருந்து தேவைகளை பெற்றுக்கொண்டு எமது மாவட்டம் விளையாட்டுத்துறையில் இன்னும் பல சாதனைகள் படைத்து வடமாகாணத்தில் பதித்த முத்திரை போல இலங்கையிலும் தனி மாவட்டமாக முத்திரை பதிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.....
.
வீரர்களே விளையாட்டு ஆசிரியர்களே பயிற்றுவிப்பாளர்களே அதிகாரிகளே எமது மன்னார் மாவட்டம் என்னும் உணர்வினை மனதில் கொள்ளுங்கள் மேன்மை தாங்கிய உயர்அதிகாரிகளே வீரர்களை கௌரவப்படுத்துவதோடு விளையாட்டுத்துறையில் தங்களின் பார்வையை…….
வீறு நடைபோடும் எமது மன்னார்-நாம்
விரும்பி செயற்பட்டால்………
வை.கஜேந்திரன்
கவிஞர்
ஊடகவியலாளர்
mr.kajan.v@gmail.com
மன்னாரின் மகிமை பேசுகின்ற விளையாட்டு வீரர்களை கௌரவித்தல் வேண்டும்---விண்ணப்பம் கையளிப்பு,,,,
Reviewed by Author
on
April 06, 2016
Rating:

No comments:
Post a Comment