கிணற்றினுள் வீழ்ந்த சசோதரியை மீட்பதற்காக தமக்கை குதிப்பு போராடி மீட்ட போதும் சகோதரி மரணம்
ஊர்காவற்றுறையில் கிணற்றினுள் தவறிவிழுந்த சிறுமியை மீட்பதற்காக சிறுமியின் தமக்கையார் கிணற்றினுள் குதித்து சகோதரியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் நேற்றுமுன் தினம் பிற்பகல் 2 மணியளவில் ஊர்காவற்றுறை நாரந்தனை மத்தியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
அணைக்கட்டில்லாத கிணற்றை கடக்க முயன்ற 7 வயதுடைய றீகன் சியாமினி எனும் சிறுமி கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார்.சிறுமியைக் காப்பாற்ற அவரின் 15 வய துடைய தமக்கை தானும் கிணற்றினுள் குதி த்து சகோதரியை மீட்டெடுத்து உறவினர்களின் துணையுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபகரமான நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரின் விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிணற்றினுள் வீழ்ந்த சசோதரியை மீட்பதற்காக தமக்கை குதிப்பு போராடி மீட்ட போதும் சகோதரி மரணம்
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:

No comments:
Post a Comment