தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு நேற்று இந்தியாவிடம் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட இறுதி முன்மொழிபு இந்திய மத்திய அரசிடம் கையளிக்கும் பொருட்டு நேற்றைய தினம் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜனிடம் கையளிக்கப்பட்டது.
தீர்வுத்திட்ட முன்மொழிபை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், இந்தியத் துணைத் தூதுவர் ஆர்.நடராஜனிடம் நேரில் கையளித்தார்.
மருதடி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நிபுணர்குழுவில் இடம்பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த அலன் சத்தியதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவை பெற்றுக்கொண்ட இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன், குறித்த தீர்வுத்திட்ட வரைபு உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.தொடர்ந்து வெளிநாட்டு தூதுவர்களிடமும் இத்தீர்வுத்திட்டம் கையளிக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (ந)
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு நேற்று இந்தியாவிடம் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:

No comments:
Post a Comment