பூநகரியில் தொன்மையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்,,,
கிளிநொச்சி பூநகரியில் தங்களுடைய கலாச்சார நிகழ்வு ஒன்றுக்காக அங்குள்ள தொன்மை மிக்க கோட்டையின் பகுதிகளை இராணுவத்தினர் உடைத்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது.
பழமை மிக்க செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மரபுரிமை சின்னமாக விளங்கக் கூடிய இந்தக் கோட்டையை பாதுகாக்க வேண்டிய நிலையில் அது இராணுவத்தினரால் தங்களுடைய ஒரு நாள் நிகழ்வுக்காக உடைத்து சேதப்படுத்தியமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது.
ஒரு நாள் நிகழ்வுக்காக கோட்டையின் மேற்பகுதி செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோட்டை இலங்கை தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டியது என அறிவிக்கப்பட்ட போதும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இனி வரும் காலங்களில் என்றாலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ள இந்தக் கோட்டையை பாதுகாக்க முன் வர வேண்டும் என பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
பூநகரியில் தொன்மையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்,,,
Reviewed by Author
on
April 12, 2016
Rating:
Reviewed by Author
on
April 12, 2016
Rating:





No comments:
Post a Comment