வடக்கு அமைச்சரவையை மற்றியமைக்க கோரிக்கை
வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள் ஆகியோரினை மாற்றுமாறு கோரி மாகாண சபையின் பதினாறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர். இன்றைய தினம் வடக்கு மாகாண சபை கூடவுள்ள நிலையில், நேற்றைய தினம் குறித்த கடிதம் கையளிக்கப்படுள்ளது.
வடக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் 21.09.2013 அன்று நடைபெற்றது. 11.10.2013 அன்று சத்திய பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டோம். 11.04.2016 அன்று இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்துள்ளோம். மிகுதி இரண்டரை வருடங்களை சிறப்பாக கடப்பதற்கு மேற்படி மாற்றங்களை ஏறுபடுத்தி தருமாறு கோரியே மேற்படி கடிதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் உள்ள நான்கு அமைச்சர்களும் மாற்றப்பட்டு அதே தகுதியுடைய ஏனைய நான்கு பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது, நான்கு கட்சிகளினது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி மாற்றங்களுக்கு தேவை ஏற்படின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர் பதவிகளையும் புதியவர்களுக்கு வழங்க முடியும், இறுதி யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும். தேர்தல் முடிந்த கையோடு புதிய அமைச்சர்களின் தெரிவின் பின்னர்,
பொறுப்புக்கூறல் பதவிகள் பிரித்து கொடுக்கப்பட்டன, எனினும் இந்த துறைகள் சிறப்பாக இயங்காத நிலையில் அவற்றை நீக்குமாறு தங்களுக்கு [முதலமைச்சருக்கு] அறிவித்தும் புதிய துறைகள் பிரித்து வளங்கப்படனவே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இவற்றை சிறப்பாக இயங்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என பல கோரிக்கை அடங்கிய கடிதம் நேற்றைய தினம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில், மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களான அன்ரனி ஜெயநாதன், கலாநிதி க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம், ப.அரியரத்தினம், வ.கமலேஸ்வரன், அ.பரஞ்சோதி, வைத்தியர் ஞா.குணசீலன், வே.சிவயோகன்,
திருமதி அனந்தி சசிதரன், ஜி,ரி.லிங்கநாதன், க.தர்மலிங்கம், ஆ.சி.து ரவிகரன், பிரிமுஸ் சிராய்வா, ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி நடராஜ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதேவேளை அமைச்சர்கள் மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment