கனடாவில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை தமிழர்...
கனடா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவரின் அபாரமான ஹாக்கி விளையாட்டு திறமைகளை கண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரசாந்தன் அருச்சுனன்(17) என்பவர் சிறு குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பத்தினர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் குடியேறினர்.
சிறுவயது முதல் படிப்பிலும், விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரசாந்தனை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
வருடங்கள் செல்ல தற்போது இதே நகரில் உள்ள Westview Centennial என்ற உயர்நிலைப்பள்ளியில் பயின்று வருவதுடன் அவருக்கு பிடித்தமான ஹாக்கி விளையாட்டில் அதிக கவனமும் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரசாந்தனின் அபாரமான திறமைகளை கண்டு வியந்த Thurgood Marshall என்ற கல்லூரி பிரசாந்தனை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவருக்கு உதவித்தொகை அளிக்க முன் வந்துள்ளது.
ஓண்டாரியோ மாகாணத்திலேயே தேசிய ஹாக்கி லீக் விளையாட்டு போட்டிற்காக ஒரு இலங்கை தமிழர் உதவித்தொகை பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த தகவல் பிரசாந்தனுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் உற்சாகத்தில் பெற்றோரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த உதவித்தொகை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரசாந்தன் பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ‘தேசிய ஹாக்கி லீக் உதவித்தொகை கிடைத்துள்ளது எனது கடுமையான முயற்சிக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.
கிரேடு-3 படிக்கும்போதே ஹாக்கி போட்டிகளில் அதிகம் ஆர்வம் செலுத்தினேன். ஹாக்கி விளையாட்டை கற்றுத் தரும் HEROS என்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து ஹாக்கி விளையாட்டில் தனக்கு உள்ள திறமைகளை வளர்த்துக்கொண்டேன்.எனக்கு பயிற்சி அளித்த Tony Wray என்பவரின் நம்பிக்கை வார்த்தைகள் என்னை மேலும் திறமை வாய்ந்தவனாக மாற்றியது.
ஹாக்கி விளையாட்டு போட்டியில் சுமார் 94 சதவிகித சராசரி புள்ளிகளை பெற்றுள்ளதால் இப்போது என்னுடைய திறமைகளுக்காக தேசிய ஹாக்கி லீக் உதவித் தொகை கிடைத்துள்ளது.
இந்த உதவித் தொகையை பயன்படுத்தி வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயந்திர பொறியியல் படிப்பேன்.
இந்த படிப்பின் மூலம் ஒரு நாள் ‘இரு எரிபொருள் மூலம் பறக்கும் விமானத்தை(hybrid airplane) முதன் முதலாக வடிவமைத்தவன்’ என்ற பெருமையை நிச்சயமாக பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘எந்த துறையாக இருந்தாலும், அதில் முழு முயற்சியுடன் ஈடுப்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். என்னால் முடியும் என்றால், அது உங்களாலும் நிச்சயம் முடியும்’ என உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் பிரசாந்தன் பேசியுள்ளார்.
கனடாவில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை தமிழர்...
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment