கிழக்கு பல்கலையில் பிராந்திய அபிவிருத்திக்கான அறிவுத்தேடல் எனும் சர்வதேச ஆய்வு மாநாடு -
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் நிலையான பிராந்திய அபிவிருத்திக்கான அறிவுத்தேடல் எனும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த தகவலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வாய்வு மாநாட்டின் பிரதான நோக்கமானது தேசிய மற்றும் சர்வதேச ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக்கொடுப்பதும், பிராந்திய அபிவிருத்திக்கான தர்க்க ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், உள்வாங்கிக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதுமாகும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதில், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், மருத்துவமும் சுகாதார விஞ்ஞானமும், மொழியும் மொழியியலும், முகாமைத்துவமும் பொருளியலும் எனும் தலைப்புக்களில் ஆய்வுக்களங்கள் இடம்பெறவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலையில் பிராந்திய அபிவிருத்திக்கான அறிவுத்தேடல் எனும் சர்வதேச ஆய்வு மாநாடு -
Reviewed by Author
on
April 19, 2016
Rating:
Reviewed by Author
on
April 19, 2016
Rating:

No comments:
Post a Comment