சர்வாதிகாரி ஹிட்லரின் குடியுரிமையை பறித்த ஜேர்மன் நகரம்: காரணம் என்ன?
உலகை உலுக்கிய ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை அந்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் பறித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் உள்ள தன்னாட்சி மாகாணமான பவேரியாவில் Tegernsee என்ற நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று 71 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், 1933ம் ஆண்டு ஹிட்லரை ஜேர்மனியின் சான்சலராக நியமித்த அப்போதைய ஜானதிபதியான Paul von Hindenburg என்பவரின் கெளரவ குடியுரிமையையும் இதே நகராட்சி ஏற்கனவே பறித்துள்ளது.
ஜேர்மனியில் அரசியலமைப்பு சட்டப்படி யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டு அவை நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை தானாகவே பறிக்கப்படும்.
ஆனால், ஹிட்லர் மற்றும் ஜனாதிபதி மீதிருந்த போர்க்குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால், அவர்களின் கெளரவ குடியுரிமை தானாகவே பறிப்படமாட்டாது.
அதே சமயம், பல்வேறு புகார்களுக்கு உள்ளான நபர் உயிரிழந்துவிட்டால், அவருடைய கெளரவ குடியுரிமை தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
எனவே, ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது அல்லது என சில நகரங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
எனினும், ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை எதனால் பறிக்கப்பட்டது என்ற காரணத்தை Tegernsee நகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வாதிகாரி ஹிட்லரின் குடியுரிமையை பறித்த ஜேர்மன் நகரம்: காரணம் என்ன?
Reviewed by Author
on
April 07, 2016
Rating:

No comments:
Post a Comment