வடமாகாணத்தின் 05 வைத்திய கலாநிதிகளுக்கு இலங்கையின் உயரிய 04 தேசிய விருதுகள்…….படங்கள் இணைப்பு
அகில உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு ஆங்கில-ஆயுள்வேத-சித்த பரம்பரை ஆயுள்வேத ஹோமியோபதி-அக்குபஞ்சர் மனோதத்துவ மருத்துவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச மருத்துவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்கின்ற 25வது ஒன்று கூடல் நிகழ்வானது 08-04-2016 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது.
இலங்கையின் மதிப்புமிக்க தேசிய விருதுகளான கீர்த்திஸ்ரீ-தேசபந்து-வைத்தியா அபிமானி தேசிய சமாதான பேரவையாலும்(NATIONAL PEACE ASSOCATION) அத்துடன் சர்வதேச ஆசிய ஆயுள்வேத மருத்துவ ஆராய்ச்சி சபையினால் சர்வதேச விருதான வைத்திய ஜோதிபண்டிதர் விருதுடன் தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வட மாகணத்தில் இருந்து 05 வைத்திய கலாநிதிகள் யாழ் மாவட்டத்தில் இருந்து…..
வைத்திய கலாநிதி திருமதி தனலெட்சுமி பத்மநாதன்
வைத்திய கலாநிதி திருமதி ஜானகி குகநாதன்
வைத்திய கலாநிதி திருமதி சிவபாக்கியம் கனகேந்திரன்
வைத்திய கலாநிதி திருமதி மங்கையற்கரசி பாலச்சந்திரன்
இவர்களுடன் சிறப்பாக எமது மன்னார் மாவட்டத்தின் மைந்தன் சித்த மருத்துவநிபுணர் வைத்திய கலாநிதியும் சமாதான நீதவானுமாகிய செல்வக்கண்டு லோகநாதன்.BSMS அவர்களும் நிகழ்வில் மங்களவிளக்கேற்றியதுடன் கீர்த்திஸ்ரீ-தேசபந்து-வைத்தியா அபிமானி வைத்திய ஜோதி பண்டித் இவ்விருதுகளினை பெற்றுக்கொண்டு மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள்
சர்வதேச மருத்துவர் சங்கம்
தேசிய சமாதான சங்கம்-இலங்கை
அகில இந்திய மாற்றுமுறை மருத்துவநிலையம்
இந்திய மருத்துவச்சங்கம்
பாரத இந்தியா சாஸ்த்திர ஆராச்சி நிறுவனம்
ஆயுள்வேத உடற்றொழியல் கழகம்-இந்தியா
இலங்கைப்பாரம்பரிய முறைப்படி வைத்தியக்கலாநிதிகள் வரவேற்கப்பட்டு பல கலை நிழ்வுகளுடன் விருதுகள் மற்றும் தங்கப்பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாணத்தினைச்சேர்ந்த 05 வைத்திய கலாநிதிகளையும் நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
வடமாகாணத்தின் 05 வைத்திய கலாநிதிகளுக்கு இலங்கையின் உயரிய 04 தேசிய விருதுகள்…….படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment