சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் ...
சோமாலியாவில் அல் – ஷபாப் தீவிரவாதிகளுக்கு சக ஊடகவியலாளர்கள் ஐவரைக் கொல்வதற்கு உதவிய ஊடகவியலாளர் ஒருவருக்கு திங்கட்கிழமை துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னர் கௌரவமிக்க ஊடகவியலாளராக விளங்கிய ஹஸன் ஹனாபிக்கு கடந்த மாதம் தலைநகர் மொகாடிஸுவிலுள்ள இராணுவ நீதிமன்றமொன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
அவர் 2007 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதற்கு தீவிரவாத குழுவிற்கு உதவியதாக கூறப்படுகிறது.
அன்டாலஸ் வானொலியில் கடமையாற்றிய பின்னர் அவர், மேற்படி தீவிரவாத குழுவில் இணைந்து கொண் டதாகக் கூறப்படுகிறது.
2007 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் 25 க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் ...
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment