அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கிராமம் ஊர்மனை பகுதியில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் ஒருவர் கைது.(படம்)









இந்தியாவில் இருந்து கடல் ஊடாக தலைமன்னார் பகுதிக்கு கடத்திவரப்பட்ட   ஒரு தொகுதி கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று 25-04-2016  திங்கட்கிழமை காலை கைப்பற்றியுள்ளதோடு,சந்தேகத்தின் பெயரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட  விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்;ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பிற்கமைவாக தலைமன்னார் கிராமம் ஊர் மனைப்பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட  விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்   இன்று திங்கட்கிமை காலை 8 கிலோ 320 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளுடன் அப்பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 8 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரிய வருகின்றது.

மன்னார் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தலைமையில் பொலிஸ் பரிசோதகர் மடவல,பொலிஸ் சாஜன் கமகே(25405),பொலிஸ் சாஜன் அத்தநாயக்க(49615),பொலிஸ் கொஸ்தபில்களான விக்கிரமசிங்க(33158),உப்புள்(16512),ரத்னாயக்க(74157),ஸ்ராலின்(5938),றொசான்(40735),பொலிஸ் சாரதி மதுசங்க(80744) ஆகியோர் இணைந்து குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

தற்போது மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-விசாரனைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


தலைமன்னார் கிராமம் ஊர்மனை பகுதியில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் ஒருவர் கைது.(படம்) Reviewed by Author on April 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.