காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை-அமைச்சர் றிஸாட்.
காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து இயங்கச் செய்வதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (25-04-2016)திங்கட்கிழமை காலை குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட குறித்த தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள், இடி பாடுகளுக்கு மத்தியில் கிடந்ததைக் கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்டார்.
அங்குள்ள பல்வேறு உபகரணத் தொகுதிகள், இரும்புக் கேடயங்கள், இரும்பு உலைகள் ஆகியவை, அண்மைக் காலங்களில் சூரையாடப்பட்டிருப்பதாக அங்கு அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹசைன் பைலா, மௌலவி சுபியான், சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ரியாஸ் சாலி, மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உட்பட அதிகாரிகள் பலர் அமைச்சருடன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட குறித்த தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள், இடி பாடுகளுக்கு மத்தியில் கிடந்ததைக் கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்டார்.
அங்குள்ள பல்வேறு உபகரணத் தொகுதிகள், இரும்புக் கேடயங்கள், இரும்பு உலைகள் ஆகியவை, அண்மைக் காலங்களில் சூரையாடப்பட்டிருப்பதாக அங்கு அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹசைன் பைலா, மௌலவி சுபியான், சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ரியாஸ் சாலி, மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உட்பட அதிகாரிகள் பலர் அமைச்சருடன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை-அமைச்சர் றிஸாட்.
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment