மன்னார் பஸார் பகுதியில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கிய 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.-Photos
மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களினுள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் திடீர் சோதனைகளை மேற்கொண்ட போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
-பழ வகைகள் விற்பனை நிலையம்,மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் கூல்பார் போன்ற 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவே மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள பழ வகைகள் விற்பனை நிலையம்,மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் கூல்பார் போன்ற 17 வர்த்தக நிலையங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை திடீர் என சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சுகாதார சீர் கேடுகளுடன் செயற்பட்டு வந்த பழ வகைகள் விற்பனை நிலையம்,மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் கூல்பார் போன்ற 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்றகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி மன்னார் நீதமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
மேலும் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட கூல்பார் ஒன்றை உடனடியாக மூடிய பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கூல்பாரில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பஸார் பகுதியில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கிய 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.-Photos
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 22, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 22, 2016
 
        Rating: 




No comments:
Post a Comment