அண்மைய செய்திகள்

recent
-

சாவை வென்று சரித்திரம் படைத்த கிரிக்கெட் வீரர்கள்....08


கிரிக்கெட்டில் போட்டிகளின் போதும், பயிற்சியின் போதும் காயம்ஏற்படும். இது விளையாட்டில் நிகழக்கூடிய ஒன்று தான்.

ஆனால் அதையும் தாண்டி சில வீரர்கள்தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை சந்தித்து இருக்கின்றனர்.

அந்த சிக்கல்கள் அவர்களின் உயிர்களும் பெரிய ஆபத்தாய் விளங்கி இருக்கிறது.

ஆனாலும் சாவை வென்று அவர்கள் சரித்திரம் படைத்துள்ளனர். அத்தகைய வீரர்களைபற்றி பார்க்கலாம்.

முத்தையா முரளிதரன்
உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சுனாமி தாக்குதல். அப்போது இலங்கையும் சுனாமி பேரலைகளால் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பின் போது கிரிக்கெட் வீரர் முரளிதரன் மற்றும் அவரது குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மைக்கேல் கிளார்க்
அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க், 2006ம் ஆண்டு தோல் புற்றுநோயால் தாக்கப்பட்டார். அந்த நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. அந்த நிலையிலும் போராடி தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
தினேஷ் சந்திமால்
 
2004ம் ஆண்டு வந்த சுனாமி இலங்கை வீரர் தினேஷ் சந்திமாலையும் விட்டு வைக்கவில்லை. அந்த பேரழிவில் அனைத்தையும் இழந்து அனாதையாக நின்றார். இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆண்ரூ பிளிண்டாப்
இங்கிலாந்து முன்னாள் வீரர் பிளிண்டாப் அதிகமாக மது குடிக்கும் பழக்கும் கொண்டவர். இவர் கடந்த 2007 உலகக்கிண்ண தொடரின் போது ஒரு முக்கியமான போட்டிக்கு முன் ஒரு படகில் தனது அணி வீரர்களுடன் மது அருந்தி தன்னிலை மறந்தார். அந்த படகு மூழ்கியும், கடற்கரையில் கண் விழித்துள்ளார். இதனால் அவரது துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.
மேத்யூ வாடே
அவுஸ்திரேலிய முன்னாள் வீரரான மேத்யூ வாடேவும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் தான். தனது 16வது வயதில் கால்பந்து விளையாடும் போது இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். இந்நிலையில் அவர் விரைச்சிரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதன் பின்னர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் குணமடைந்தார்.
வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான வாசிம் அக்ரம் அண்மையில் ஒரு துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தனது காரில் இடித்து விட்டு சென்றவரை தட்டிக் கேட்டதால் அவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக வாசிம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யுவராஜ் சிங்
இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 2011ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார் யுவராஜ் சிங். தற்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பியுள்ள யுவராஜ் சிங் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
இலங்கை வீரர்கள்
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் 12 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாகூரில் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்த சம்பவம் நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கை வீரர்கள் சமரவீரா, பரணவிதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற வீரர்கள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.













சாவை வென்று சரித்திரம் படைத்த கிரிக்கெட் வீரர்கள்....08 Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.