கொலன்னாவையை சுத்திகரிக்க 1000 சிவில் பாதுகாப்பு படையினர் களத்தில்....
வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பகுதியை சுத்திகரிக்க 1000 சிவில் பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை பிரதேசத்தின் 38 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலேயே இந்த சுத்திகரிப்பு வேலை இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமையவே இந்த சுத்திகரிப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 22 சிவில் மத்திய நிலையங்கள் மற்றும் 5 பயிற்சி நிலையங்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட 7 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் என்பன சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரரத்ன பல்லேகமவின் பங்கேற்புடன் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.மியனவலவிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவிஸாவளை, சீதாவக்க மற்றும் கடுவல பிரதேசங்களின் பொது இடங்கள், கிணறுகள் மற்றும் வீதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளிலும் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவையை சுத்திகரிக்க 1000 சிவில் பாதுகாப்பு படையினர் களத்தில்....
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment