ஸ்மார்ட் சிட்டி நிர்மாணிப்பிற்காக தென்கொரியா 63.2 பில்லியன் முதலீடு.....
இலங்கையின் நிர்மாணிக்கப்படவுள்ள ஸ்மார்ட் சிட்டி நிர்மாணத்திற்காக தென்கொரியா 63.2 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துடன் கூடிய நகராக குறித்த நகரம்உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான முதலீடுகளை செய்ய தென்கொரியா அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தென்கொரியா பத்திரிகையான கொரியன்ஹேரல்ட் பத்திரிகையில்அந்நாட்டின் காணி அமைச்சு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் இரு தரப்பினரும்கைச்சாத்திடப்படவுள்ளதாக இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் தென்கொரியாவின் காணி அமைச்சும்,மேல்மாகாணஅபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கைச்சாத்திடவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய நீர் விநியோகம்,போக்குவரத்துசேவை, வீட்டுத்திட்டம், வாகன தரிப்பிடம் முதலானவற்றை உள்ளடக்கிய வகையில் இந்தநகரத்தை அமைக்க தென்னொரியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி நிர்மாணிப்பிற்காக தென்கொரியா 63.2 பில்லியன் முதலீடு.....
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment