மே 12-18 வரை முள்ளிவாய்க்கால் வாரம் பிரகடனம் வடக்கு மாகாண சபை அறிவிப்பு....
பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படையினரால் கொல்லப்பட்ட இறுதி யுத்தம் நடைந்தேறிய மே 12ஆம் திகதி தொடக்கம் மே18 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியை முள்ளிவாய்க்கால் வாரமாக பிரகடனம் செய்துள்ள வடக்கு மாகாணசபை, இந்த ஏழு நாட்களும் வடக்கு கிழக்கின் யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் நினைவாக நினைவு நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மேற்படி அறிவிப்பினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமாகிய நிலையில், அதனை ஒட்டி செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் சுடர் ஏற்றி அஞ்சலிகள் நடைபெற்ற பின்னரே ஊடகங்களுக்கு சிவாஜிலிங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதனடிப்படை யில் இன்றைய தினம் (நேற்று) செம்மணி படுகொலை இடம்பெற்ற இடத்திலும்,
நாளைய தினம் (இன்று) 13ஆம் திகதி நாகர்கோவிலில் இலங்கை விமானப்படையால் நூற்றுக்கணக்கான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்திலும் 14ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்ட நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும், 15ஆம் திகதி இலங்கை கடற்படையால் நூற்றுக்கணக்கான மக்கள் வெட்டி கொலைசெய்யப்பட்ட நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவு தூபியிலும்,
16ஆம் திகதி வடக்கு கிழக்கின் தலைநகரான திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிலும், 17 ஆம் திகதி தென்மராட்சியில் நடைபெற்ற படுகொலை இடத்திலும், 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க் காலிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இறுதி நாளான பதினெட்டாம் திகதி காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை வடக்கு கிழக்கில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பூசைகளையும் உயிரிழந்தவர்கள் நினைவாக நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசினால் எம்மீது வலிந்து முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை நாங்கள் நினைவு கூருவதன் மூலமே எமது விடு தலையை நோக்கிய பயணத்தை எந்த தடையுமின்றியும் முன்னெடுக்க முடியும். எமது சொந்தங்கள், போராளிகள் தான் கொடிய போரில் கொல்லப்பட்டார்கள். அவர்களை நினைவு கூருவது எம்முடைய கடமைக்கப் பால், உணர்வு பூர்வமான செயற்பாடாகும்.
நாங்கள் தொடர்ந்தும் எமது விடுதலை நோக்கிய பயணத்தை முன்னெடுப்பதற்கு இந்த நினைவு நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் எமக்கு உந்துதலை அளிக்கின்றன. எமது உறவுகளை நினைவு கூருவதற்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் இயலுமானவரை அனைவரையும் காலை பத்து மணிக்கு ஒன்று கூடுமாறு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மே 12-18 வரை முள்ளிவாய்க்கால் வாரம் பிரகடனம் வடக்கு மாகாண சபை அறிவிப்பு....
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment