யாழில் போசாக்கு செயற்திட்டத்தில் 12932 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன....
தேசிய போசாக்கு செயற்திட்டத்தில் 12932 குடும்பங்கள் யாழ் மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேசிய போசாக்கு நிகழ்ச்சித்திட்ட மாவட்டக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி மற்றும் ஏனைய வாழ்வாதார உதவித்திட்டங்களில் முன்னுரிமை வழங்குமாறும் வழங்கப்பட்ட உதவிகளில் அம்மக்கள் முன்னேற்றம் அடைகின்றனரா என்ற அவதானம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இச்செயல்திட்டத்தின் மூலம் மாவட்ட மக்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கு வினைத்திறனான செயற்திட்டமூடாக அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
யாழில் போசாக்கு செயற்திட்டத்தில் 12932 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன....
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment