மன்னாரில் 1466 குடும்பங்கள் வெள்ளத்தால் பதிப்பு!
மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளது. இதன்படி மன்னார் மாவட்டத்தில் 1466 குடும்பங்களை சேர்ந்த 5085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மன்னாரில் 212 குடும்பங்களை சேர்ந்த 733 பேரும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 936 குடும்பங்களை சேர்ந்த 3146 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 230 குடும்பங்களை சேர்ந்த 854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கில் 88 குடும்பங்களை சேர்ந்த 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான உலர் உணவுகளை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
இதேவேளை நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையினால் பேசாலையில் 17 படகுகள் சேதமடைந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது. இருந்த போதும் 30 படகுகள் கடலில் மூழ்கியுள்ளன.
மேலும் சிலாவத்துறை - புத்தளம் வீதியில் எலுவங்குளம் பகுதியில் வெள்ள நீர் வீதிக்கு குறுக்காக பாய்ந்து ஓடுவதால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏ 32 வீதியில் பாலியாறு பகுதியில் வெள்ள நீர் குறுக்காக பாய்ந்து செல்வதால் அந்த வீதியும் மூடப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கில் மூன்றாம் பிட்டியில் 3 படகுகள் சேதமடைந்துள்ளன, அதேபோன்று தேவன் பிட்டியில் ஒரு படகு முற்று முழுவதுமாக சேதமடைந்துள்ளதுடன் 3 படகுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது, எனினும் இன்று மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் 1466 குடும்பங்கள் வெள்ளத்தால் பதிப்பு!
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment