குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு குறித்து 16ம் திகதி தீர்மானிக்கப்படும்! எதிர்க்கட்சித் தலைவர்...
அண்மையில் குறை நிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்த சபநாயகரினால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் அடங்கிய குழு எதிர்வரும் 16ம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கும் என அந்தக் குழுவின் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாடாளுமன்ற வளாகக் கட்டத்தில் நேற்று முற்பகல் கூடிய இந்தக் குழு, குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பின் போது எழுந்த சர்ச்சை பற்றி கலந்துரையாடியது.
இந்த விடயம் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் கூடவுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக விசாரணைக் குழு அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் திகதி நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பிலான வாக்கெடுப்பின் போது முறைகேடுகள் எதுவும் இடம்பெற்றதா என்பதனை கண்டறிந்து கொள்ள விசாரணைக் குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அமைச்சர் ரவூப் ஹக்கிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமல் ராஜபக்ச ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பில் குளறுபடிகள் காணப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு குறித்து 16ம் திகதி தீர்மானிக்கப்படும்! எதிர்க்கட்சித் தலைவர்...
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment