அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் “ரஜனி பண்டிட்”


பெண் துப்பறிவாளராக(Detective Agent) பணிசெய்வதே கடினம் அதிலும் துப்புதுலக்க ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது. ஆனாலும், அதை சாதித்துக்காட்டி இருக்கிறார் இந்த பெண் துப்பறிவாளர்.

இந்திய துப்பறியும் துறையில் ஒரு பெண் வேலையில் சேர்வது, அப்படி சேர்ந்தாலும் ஒருதிறமைசாலியாக உருவெடுப்பது எளிதான காரியம் இல்லை.

ஆனால் அதே இந்தியாவில் துப்புறிவதற்கு ஒரு தனியார் நிறுவனத்தையே ஏற்படுத்தி பெண் துப்பறிவாளராகவும் பணியாற்றி பல வழக்குகளை சந்தித்து, தன் வாழ்க்கையையே சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் மாறுவேட மர்மங்கள் கொண்டதுமான ஒரு வரலாற்று பொக்கிஷமாக்கி உள்ளார் இந்த ரஜனி பண்டிட்.

ஆனால், இந்த வேலைக்கு அவர் வந்ததற்கான காரணம்.வேறுவேலை ஏதும் கிடைக்கவில்லை என்பது தான் திகைப்பானது. இந்த வேலைக்கு வரும்முன் ஒரு தற்காலிக வேலையில் மூன்று மாதம் திருப்தியின்றி கழித்தார்.

பெற்றோரிடம் ஆதரவும் எதிர்ப்பும்

இது ஒரு பெண்ணிற்கான வேலைஇல்லை என தன் தந்தை உட்பட பலர் கூறியும் அவருக்குள் இருக்கும் தன்னம்பிக்கை அவரை பின் வாங்க வைக்கவில்லை. தன் மகள் சிரமம் சிதிலமின்றி வாழவேண்டும் என்பது ஒரு தந்தையின் உணர்வாக இருப்பது இயல்பு.

ஆனால், ரஜனியின் தாயார் இந்த வேலைக்கு ஆதரவளித்தார். அதற்கு காரணம் மகளின் குணம், மனம், செயல்பாடுகள் மீது அவருக்கு இருந்த ஒரு ஆய்வு தான்.

நிறுவனம் துவங்கினார்

மும்பையை சேர்ந்த ரஜனி தனது 25 வயதில்,1991 ம் ஆண்டில் “துப்பறியும் சேவைகள் (Rajani Pandid investigation services) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

50 வயதை அடைந்திருக்கும் அவர், இப்போது 20 பேர் கொண்ட துப்பறியும் குழுவை இயக்குகிறார்.

இதுவரை சிறியதும் பெரியதுமாக 75,000 வழக்குகளை சந்தித்து தீர்வு கண்டிருக்கிறார் என்கிற போது, அவர் கடந்து வந்த தூரமும் வேலையில் காட்டிய வேகமும் தெரிகிறது.
அது நம் சமுதாயத்துக்கு ஆற்றிய எவ்வளவு பெரிய சேவை என்பது மதிப்பீடுகளை கடந்தது.

பெண்கள் மீது இன்னும் ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் குறையாத இந்த சமுதாயத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்தே இந்த நிலையை எட்டி இருக்கிறார்.

விளம்பரத்திற்கு பத்திரிகைகளில் இடம் பிடிப்பது போன்ற அடிப்படை விஷயங்களுக்கும் அவர் போராட வேண்டி இருந்தது.

ஆனால் ரஜனி அனைத்தையும் சமாளிக்க தயாராகவே இருந்தார். இந்த தொழிலைப் பற்றி நன்கு சிந்தித்து திட்டமிட்டு இறங்கியதால், அவருக்கு எதிராக இறங்கிய துன்பங்கள் எல்லாமே எதிர்பார்த்ததாகவே இருந்ததால் சோர்வின்றி சுவைக்க முடிந்தது.

உலக பிரபலமானது

அவருடைய நிறுவனம் மெல்ல வளர்ந்து இன்று பெரும் பிரபலமடைந்திருக்கிறது. அதற்கு காரணம் அவரைஅணுகுபவர்களின் நெஞ்சைத் தொடும் நேர்மையான பணியே.

அவருடைய நிறுவனத்துக்கான கட்சிக்காரர்கள், இந்தியாவின் எல்லைகளையும் கடந்து, உலகின் பலபகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளனர்.

ஆபத்து நிறைந்த இந்த வேலையில், பயத்தை துச்சமென வீசி தொழிலை தோளில் சுமக்க காரணமாக அவர் கூறுகிற சாரம் இதுதான்.

’பயப்படுவதற்குபல வழிகள் இருந்தாலும் மரணம் வரும் என்பதே மூல காரணம். அந்த மரணத்திற்கு நான் பயப்படவில்லை. மரணம் எப்படியும் வரும். வாழும் வீட்டுக்குள்ளே குந்தி இருந்தாலும் கூரை சரிந்து விழுந்தும் சம்பவிக்கலாம்.
இந்த தைரியம் தான் என்னை கலங்காமல் வழிநடத்துகிற ஊன்றுகோல் என்கிறார் ரஜனி.
வீறுகொள்ளவைத்த விளைவுகள்

கல்லூரியில்படித்த நாட்களிலேயே ரஜனிக்கு துப்பறியும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

அவருக்கு இயல்பாகவே மனிதர்களின் முகத்தில் வெளிப்படும் அறிகுறிகளை வைத்து, அவர்களுடைய மனநிலை அதற்கு காரணமாக அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை கணிக்கும் ஆற்றல் இருக்கிறது.

கொஞ்சம் ஆராயவும் ஆரம்பித்தால் அவ்வளவுதான் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணையே நெருங்கி அதை நேர்செய்துவிடுவார்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் அவர்கள் வீட்டிலும் பல பிரச்சினைகளும் புதிர்களும் இருப்பது நமக்குத் தெரிய வரும்.

ஆனால், அந்த பிரச்சினைகள் உரியவர்களுக்கே தெரியாமலும் இருக்கிறது. தெரிந்தாலும் அவர்களால் அதை தீர்க்க முடியாமலும் பிறரின் துணை தேவைப்படுவதாகவும் உள்ளது.

போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் அதை தீர்க்க எங்கே செல்வது என்று புரியாமலும் தவிக்கின்றனர்.

இதுவே துப்பறிவாளர்கள் உள்ளே வருவதற்கான தருணம் என கூறுகிறார்.

அக்கறையால் வந்த முதல் வழக்கு

முதல் வழக்கு இவருடைய நிறுவனத்துக்கு வந்து யாரும் கொடுத்தது அல்ல. இவர் கல்லூரியில் படித்தபோதே துவங்கிவிட்டது.



ரஜனியின் தோழிகளில் ஒருவர் அறியாமை மற்றும் ஆடம்பர மோகம் காராணமாக தவறான சில போக்குகளில் ஈடுபட்டார்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர் அவளுடைய சில ஆண்நண்பர்கள். அதனால், அவளுக்கு தீய பழக்கங்களும் ஏற்பட ஆரம்பித்தது. துப்பறிவாளராகவே பிறந்திருக்கும் ரஜனி இதை கவனித்து வந்தார்.

மறைக்கும் தோழியிடம் பேசி பயனில்லை, அவளின் பெற்றோரிடம் ரஜனி பேசினார். வருந்திய பெற்றோருக்கும் தடுக்கும் வழி தெரியாமல் ரஜனியிடமே பொறுப்பை ஒப்படைத்தனர்.

அன்று தான்அவருக்குள் ஓசையற்று இருந்த துப்பறிவு குணம் முதல் குரல் எழுப்பியது. அடங்கிக் கிடந்தது நாளடைவில் அவருக்கே அடையாளம் தர ஆரம்பித்தது.

அரசு தனியார் எதுவானாலும் துப்பறியும் சேவையே சமுதாய கிருமிகளுக்கு ஆண்டிபயாடிக் போன்றது தான்.

திருக்குறளுக்கு இணங்க

” இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.” இந்தகுறள் வழிநடத்தும் ஒரு தலைவனுக்கு அறிவுரையாக திருவள்ளுவர் கூறியது.
உலகையே வழிநடத்தும் தலைவனுக்கு, யாரிடம் எந்த பொறுப்பை கொடுக்க வேண்டும் என்பதும் அந்த பொறுப்பில் ஜெயிக்க எந்த திறமையை வளர்க்க வேண்டும் என்பதும் தெரியாமல் இருக்குமா?. இதை நாம் ரஜனி பண்டிட்டின் வாழ்க்கையிலே அறியலாம்.

பெண்கள்மு ன்னேறிய நிலையிலும் பெண்களால் முடியாதது என சில வேலைகளை இந்த சமுதாயம் இலக்காக நிர்ணயிக்கிறது.

அந்த இலக்குகள் ஒவ்வொன்றும் சில சாதனைப் பெண்களால்அவ்வப்போது எட்டப்படுகிறது. அது இலக்கண வரம்புகளையே மாற்றுகிறது.



இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் “ரஜனி பண்டிட்” Reviewed by Author on May 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.