வடக்கு சபையின் ஏற்பாட்டில் 18ஆம் திகதி நினைவேந்தல்...
இறுதிப் போரில் உயிரிழந்த மக்களின் 7 ஆவது ஆண்டு நினைவு தினத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு ஆளுங் கட்சி உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நேற்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் கூடி சில தீர்மானங்களை எடுத்திருந்தனர்.
அந்த வகையில் இந்த நிகழ்வுக்கு வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து போரில் இறந்த அனை த்து உயிர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யதிட்டமிடப்பட்டது.இந்த நிகழ்வை வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் நட த்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டதுடன்,
அன்றைய தினம் காலை 6 மணி தொட க்கம் காலை 7 மணி வரை வடமாகாணத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு ஸ்தல ங்களிலும் உயிரிழந்த அனைவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை நடைபெற வேண் டும் என மதத்தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் முழுவதும் இந்த ஏற்பாட்டுக்குழு முள்ளிவாய்க்கால் பகுதியில் நின்று பொது மக்களுக்கான குடிநீர், பயண வசதிகளை மேற் கொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்க ப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வை நடத்துவது தொடர் பாக உரிய முறையில் வடமாகாண பொலி ஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்துவதாகவும் நேற் றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் வடமாகாண கல்வி அமை ச்சர் குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சுகா தார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகா ண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட் ணம், அனந்தி சசிதரன், ரவிகரன், சிவனே சன்,சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு சபையின் ஏற்பாட்டில் 18ஆம் திகதி நினைவேந்தல்...
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment