வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களின் மறியல் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பு....
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகிய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிய பிணை விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்.மேல் நீதிமன்றம், சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார், கோபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாந்தன், சிவதேவன் துஷாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜயதரன் கோகிலன் ஆகியோரு டன் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.
விளக்கமறியலில் தடுத்து வைக் கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர் களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் நேற்றுடன் முடிவுறுகின்றது. இந்த நிலையில் இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, பிணைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் மனுவொன்றினை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் தோன்றி சட் டமா அதிபரின் மனுவை விண்ணப்பமாகத்தாக்கல் செய்திருந்தார். இந்த சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை 3 மாதத்திற்கு ஒரு தடவையாக ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரச சட்டவாதி தனது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம் யாழ்.மேல் நீதி மன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப் பட்டது. இதன்போதே குறித்த உத்தரவினை நீதிபதி பிறப்பித்திருந்தார்.
எதிரி தரப்பு சட்டத்தரணி சரத் வல்கமுவ விண்ணப்பம்
வழக்கின் 04,07,09 ஆம் சந் தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வருட காலம் அண்மித்து வரும் நிலையில் இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மனைவி, பிள்ளைகள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த எதிரிகள் சார்பில் யாழ்ப்பாணத்து சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத காரணத்தினால் சந்தேக நபர்கள் தொடர்பில் நீதியை நிலை நாட்ட நான் ஆஜராகி உள்ளேன்.
இந்த மூன்று சந்தேக நபர்களும் கொழும்பில் வசித்து வந்ததுடன், ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்துள்ள நிலையில் வித்தியா தொடர்பில் அவர்கள் அறிந்தும் வைத்துள்ளனர். 04,07,09 ஆம் சந்தேக நபர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றச்செயல்களுடன் தொடர்புபடவில்லை.
இதற்கான வீடியோ ஆதாரங்கள் கொழும்பில் சி.சி.ரி.வி கம ராக்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. இதே போல் வங்கியில் பணம் எடுத்த பற்றுச்சீட்டு, ஹோட்டலில் உணவருந்தியமைக்கான சுயாதீன சாட்சியங்களும் கொழும்பில் நின்றதற்கான ஆதாரமும் எம்மிடம் உண்டு. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறியப்படுத்தி உள்ளோம்.
ஆகவே சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்காமல் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருப்பதனால் அவர்கள் பாதிப்படைவதோடு, அவர்களில் தங்கி இருப்போரும் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
வித்தியாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தொடர்ந்தும் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றால், சி.ஐ.டி.க்கு பொருத்தமான உத்தரவு ஒன்றினை மன்று விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
விண்ணப்பம்
முதலாம் சந்தேக நபர் (சின்னப்பா)
நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னை ஒருவருடம் உள்ளே வைத்துள்ளனர். இதனால் எனது மனைவி, பிள்ளைகள் கஷ்டப்படு கின்றனர்.
நான் குற்றம் செய்தால் நான்கு சுவருக்குள் தூக்கில் போடாமல் பொது மக்கள் முன்னிலையில் வீதியில் என்னை தூக்கில் போடுங்கள் என முதலாம் சந்தேக நபரான சின்னப்பா என அழைக்கப்படும் பூபாலசிங்கம் இந்திரகுமார் கூறினார்.
இரண்டாம் சந்தேகநபர் (ஜெயா)
வித்தியா கொலை செய்யப்பட்ட பின்னர் அருணகிரி, சசி ஆகியோர் என்னை சரணடையுமாறு மிரட்டியதோடு, சி.ஐ.டி. மூலமும் மிரட்டினர் என்னை அடித்தார்கள். ஆனாலும் எனக்கு பிள்ளைகள் இருக்கு என கூறி நான் அதனை செய்யவில்லை என மறுத்தேன் அப்போதும் என்னை தாக்கினார்கள் என இரண் டாம் சந்தேக நபரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் கூறினார்.
மூன்றாம் சந்தேகநபர் (செந்தில்)
இந்திரகுமார், ஜெயக்குமார், தவக்குமார் ஆகிய நாங்கள் மூவரும் சகோதரங்கள். பதினோராம் திகதி எட்டு மணிக்கு அந்த பிள்ளையை கடத்தியதாக கூறுமாறு பொலிசார் அடித்து வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தனர். மறுபடியும் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு போய் அங்கும் சித்திரவதை செய்தார்கள்.
அப்போது அங்கே நாலாம் மாடியில் தடுப்பிலிருந்து துசாந்தனும், சந்திரகாசனும் நான்தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மேற்படி கொலையை செய்ததாக, சி.ஐ.டியினர் கூறியதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பில் எனக்கு ஒன்றுமே தெரியாது என மூன்றாம் சந்தேக நபரான பூபாலசிங்கம் தவக்கு மார் கூறினார்.
ஐந்தாம் சந்தேக நபர்
எம்மை பொலிசார் அழைத்து சென்று கைகளை பின்பக்கம் கட்டி ஆணுறுப்பிலும், கண்ணிலும் மிளகாய் தூளினை போட்டார்கள். அடித்து இதனை ஒத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்.
மேலும் யாருடனும் இங்கு சிங்களத்தில் பேசக்கூடாது என ஊர்காவற்றுறை பொலிசார் கூறியதோடு நாலாம் மாடியிலும் இதனையே செய்தனர் எனவும் ஐந்தாம் சந்தேகநபரான தில்லைநாதன் சந்திரகாந்தன் கூறினார்.
ஆறாம் சந்தேக நபர்
பொலிசார் கூறுவது போன்று என்னை 14 ஆம் திகதி கைது செய்யவில்லை 17 ஆம் திகதியே கைது செய்தனர். 14 ஆம் திகதி நான் பிரதேச சபையில் பணியாற்றி கொண்டு இருந்தேன். அதற்கான கையொப்பமும் அங்கு வைத்துள்ளேன். என்னை கைது செய்த குறிகாட்டுவான் பொலிசார் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்தார்கள். நிர்வாணமாக நடக்கவிட்டார்கள். கண்ணிலும் உடம்பிலும் மிளகாய் தூள் கொட்டினார்கள். நாலாம் மாடி விசாரணையில், நான் வித்தியாவை காதல் பண்ணியதாகவும் அதனால் அவள் செருப்பால் எனக்கு அடித்தாகவும் கூறி, நான்தான் அவளை கொலை செய்தேன் என சம்மதிக்குமாறு வற்புறுத்தி சொல்ல வைத்தனர் எனக் கூறினார்.
எட்டாம் சந்தேக நபர்
(கரந்தன்)
நாம் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக எம்மிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. அன்றைய தினம் நாலாம், ஏழாம், ஒன்பதாம் சந்தேக நபர்களுடன் கொழும்பில் நின்றேன். அதற்கான சாட்சிகள் சி.ஐ.டி. இடம் உண்டு. வித்தியா சகோதரி இன் ஒன்றுவிட்ட அண்ணன் எமக்கு நன்கு தெரிந்தவர் என்ற காரணத்தினாலும்,
சம்பவம் நடைபெற்ற இடம் எமது ஊர் என்பதனாலும் வித்தியாவின் இறுதி கிரியைக்கு போயிருந்தோம், இறுதி கிரியையை முடித்து விட்டு கொழும்பு சென்றுகொண்டிருந்த போது, சுவிஸ் குமாரினை விசா ரணைக்காக புங்குடுதீவு பொலிசார் அழைத்திருந்தனர். இதனால் கொழும்பு செல்லாமல் நாம் அனைவரும் புங்குடுதீவு திரும்பினோம்.
அப்போது எம்மை பிடித்த பொலிசார் எம்மை தாக்கி நாங்கள் தான் அந்த கொலையை செய்ததாக கூறி அதனை ஒத்துக்கொள்ளுமாறு தாக்கினர். நாங்களும் அடியின் வலியால் ஒத்துக்கொண்டோம். எனக்கு நீதிமன்றில் எந்த வழக்கும் இல்லை. கொழும்பில் நின்ற நாம் எவ்வாறு குற்றத்தை புரிந்திருக்க முடியும் என எட்டாம் சந்தேக நபரான ஜயதரன் கோகிலன் கூறினார்.
நீதிபதி கட்டளை
அரச சட்டவாதி, எதிர்த்தரப்பு சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி மற்றும் சந்தேக நபர்கள் மேற்கொண்ட விண்ணப்பத்தை அடுத்து நீதிபதி தனது கட்டளையை அறிவித்தார். சட்டமா அதிபர் தரப்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி, குறித்த நபர்களை பிணையில் விடுவிப்பதால், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும், நியாயம் நிலை நாட்டப்படுவதற்கு சந்தேக நபர்கள் தடையை ஏற்படுத்துவார்கள்,
சந்தேக நபர்கள் நீதிமன்ற வழக்குகளிற்கு ஒழுங்காக சமுகமளிக்காத நிலையும் காணப்படும், மேலும் குற்றத்தின் பாரதூரம் மக்கள் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் என்பன மீண்டும் ஏற்பட்டு விடும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே மேற்குறித்த காரணங்களுக்காக மேலும் ஒரு வருட காலத்திற்கு சந்தேக நபர்களின் விளக்க மறியலை நீடிக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றுக்கு பணிப்புரை விடுக்கிறேன்.
அதே காரணங்களுக்காக எதிரி தரப்பு சட்டத் தரணியின் விண்ணப்பம், சந்தேக நபர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சந்தேக நபர்களுக்கு பிணை மறுக்கப்படுகின்றது என கட்டளையிட்டார்.
மேலும் தொடர்ச்சியான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெறும் எனவும், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து, அதன் அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் சமர்ப்பிப்பதோடு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தர விட்டுள்ளார்.
அடுத்த வழக்கு
முதற் தடவையாக மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, இன்றிலிருந்து (நேற்றிலிருந்து) மூன்று மாத காலத்தின் பின்னர் 10.08.2016 அன்று மீண்டும் யாழ்.மேல் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஒன்பது பேரினையும் மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களின் மறியல் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பு....
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment