நான்கு மணிநேரத்தில் 183000 ரூபா நிதியினை திரட்டி சாதனை…. நானாட்டான் பாடசாலை மாணவர்கள்….
இலங்கையில் கடந்த தினங்களாக மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காவும் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் உதவி செய்யும் நோக்கில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் உதவிகளையும் முதலுதவிகளையும் வழங்குவதற்கு இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் இருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.
அதை விட எமது மன்னார் நானாட்டான் பாடசாலை உயர்தர மாணவர்கள் ஒன்றியம் வெறும் 04 மணித்தியாலத்தில் 183000 ஒரு இலட்சத்து எண்பத்தி மூவாயிரம் ரூபா நிதியினை திரட்டி தெற்கு பகுதியில் மோசமான காலநிலையினால் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவமாணவியர்களுக்கு உதவுமாறு நன்கொடையாக கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் மாணவபராயத்தில் செய்வது சாலச்சிறந்த பண்பாகும் ஏனைய பாடசாலைகளுக்கும் இம்மாணவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர் பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ததுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய மாணவமாணவியர்களுக்கும் உருவாகவேண்டும்.
அரிய ஆரோக்கியமான இச்செயற்பாட்டினை கொடுத்துதவும் பண்பினை எமது நியூமன்னார் குழுமம் சார்பாகவும் வாழ்த்தி நிற்கின்றோம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபரான அருட்சகோதரர்.விஐயதாசன் மற்றும் அருட்சகோதரர் செல்வதாஸ் அவர்களுடன் நன்கொடைகளை வழங்கிய நானாட்டான் வாழ் மக்களுக்கும் வாழத்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நான்கு மணிநேரத்தில் 183000 ரூபா நிதியினை திரட்டி சாதனை…. நானாட்டான் பாடசாலை மாணவர்கள்….
Reviewed by Author
on
May 25, 2016
Rating:

No comments:
Post a Comment