அண்மைய செய்திகள்

recent
-

ஏ – 32 வீதியில் சிறியரக வாகனங்க செல்ல ரத்து...


கடும் மழை காரணமாக பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ – 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்ணேந்திரன், திங்கட்கிழமை தெரிவித்தார்.

தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கு மேலாக நீர் பாய்கின்றது. இதனால், ஏனைய சிறிய ரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வீதியில் பாய்கின்ற நீரில் அளவு அதிகரித்தால், வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டு, படகு சேவை ஆரம்பிக்கப்படும். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய முறிகண்டி, அம்பலப் பெருமாள் மற்றும் கோட்டைகட்டி குளம் ஆகிய குளங்கள் வான் பாய்வதால் அந்நீர், வன்னேரிக்குளத்தை வந்தடைந்து, அங்கிருந்து மண்டைக்கல்லாறு வழியாக ஏ – 32 வீதியை ஊடறுத்தச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ – 32 வீதியில் சிறியரக வாகனங்க செல்ல ரத்து... Reviewed by Author on May 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.