குடிநீர்க் கட்டணத்திற்கும் இம்மாதம் தொடக்கம் வட் வரி அதிகரிப்பு!
குடிநீர்க் கட்டணத்திற்கும் இம்மாதம் தொடக்கம் வற் வரி அதிகரிப்பை உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமைக்கு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இம்மாத ஆரம்பத்தில் பதினைந்து வீதமாக வற் வரி அதிகரிக்கப்பட்ட போது குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாசிய சேவைகளுக்கு வற் வரி அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
எனினும் குடிநீர்க் கட்டணத்தில் வற் வரி அதிகரிப்பை உள்வாங்குமாறு திறைசேரி விடுத்த அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் தொடக்கம் குடிநீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மீற்றர் வாசிப்பாளர்களுக்கு தேசிய நீர்வழங்கல் சபை உள்ளக சுற்றுநிருபம் ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளது.
எனினும் தேசிய நீர்வழங்கல் சபையின் ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு போலியான வாக்குறுதிகள் அளித்துவிட்டு, மறைமுகமான வழியில் வற் வரி அதிகரிப்பை உள்வாங்குவது ஏமாற்று நடவடிக்கை என்று ஊழியர் சங்கத்தின் இணை அமைப்பாளர் உபாலி ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.
அத்துடன் இதனை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
குடிநீர்க் கட்டணத்திற்கும் இம்மாதம் தொடக்கம் வட் வரி அதிகரிப்பு!
Reviewed by Author
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment