வவுனியாவில் 3875 ஏக்கர் காணியில் சிறுபோக பயிர்செய்கை!
வவுனியாவில் மூவாயிரத்து 875 ஏக்கர் காணியில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 15500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 3875 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வரட்சி காரணமாக சிறுபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரின் அளவு குறைவடைந்துள்ளது.
அதன்படி 621 ஏக்கர் சிறுபோக காணியில் மேட்டுநில பயிர்களான கச்சான், சோழம் போன்ற பயிர்கள் பயிரிடப்டபட்டுள்ளன.
அத்துடன் மேட்டு நிலப் பயிர்செய்கை மூவாயிரத்து 300 ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் 3875 ஏக்கர் காணியில் சிறுபோக பயிர்செய்கை!
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment