மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அமைப்புக்கள் பலம் மிக்க அமைப்பாக திகழ்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர் பெருமிதம்.
நாட்டிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்தி மிக்க பலம் எமது பெண்கள் அமைப்புக்களிடம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன் கிழமை(11) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள பாடுபடுவதை நினைத்து நான் சந்தோசப்படுகின்றேன்.
மாவட்டத்தில் இடம் பெறுகின்ற அனைத்து சம்பவங்களுக்கும் மகளிர் அமைப்புக்கள் மட்டும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் இடம் பெறுகின்ற போதும் மக்களின் பங்கு பற்றுதல் குறைவாக இருக்கின்றது.
எமது மக்கள் வருமானத்தை தோடிக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆண்கள் சிலர் மதுபானத்திற்காக தமது பணத்தை செலவு செய்கின்றனர்.வருமானத்தை தேடிக்கொள்ள நினைப்பதில்லை.
இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கட்டி எழுப்ப நான் ஆசைப்படுகின்றேன்.
எனவே பெண்கள் அமைப்புக்கள் ஒன்றினைந்து பலமிக்க அமைப்பாக செயற்படுவது போன்று ஏனைய அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அமைப்புக்கள் பலம் மிக்க அமைப்பாக திகழ்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர் பெருமிதம்.
Reviewed by NEWMANNAR
on
May 11, 2016
Rating:
No comments:
Post a Comment