தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான 4 புதிய கருத்துக்கணிப்புகள்!
தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பெரும்பான்மை முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை:
இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 124 முதல் 140 தொகுதிகள் வரை கைபற்றும் என்றும், அதிமுக 89 முதல் 101 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஐக கட்சி 3 தொகுதிகள் வரையிலும், பிற கட்சிகள் 4 முதல் 8 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் நேஷன்:
நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில்,திமுக 114 முதல் 118 தொகுதிகளிலும், அதிமுக 95 முதல் 99 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு 27 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நியூஸ்:
ஏபிபி நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக 135 தொகுதிகளிலும், அதிமுக 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ்- சீ வோட்டர்:
டைம்ஸ் நவ்-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஆளுங்கட்சியான அதிமுக 139 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக 78 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். பாஜக.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின் வெளியான நான்கு கருத்துக்கணிப்புகளில் 3 கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால். திமுக-வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
எனினும், தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்பது மே-19 ஆம் திகதி உலகிற்கு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான 4 புதிய கருத்துக்கணிப்புகள்!
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment