மன்னாரில் தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.....
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை விடுவித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போதே நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கையினை யாழ் - இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த மீனவர்களை யாழ் அழைத்து சென்று அங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.....
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment