இருபத்து ஒன்றை மணமுடிக்க ஆசைப்படும் 71 வயது மூதாட்டி!
சுவிட்சர்லாந்தில் 71 வயது மூதாட்டி ஒருவர் தம்மைவிட 50 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தது நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வோட் மண்டல நீதிமன்றம் இந்த திருமணத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்த முடிவை மூதாட்டி ஏற்க மறுத்ததுடன், தாம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும், தம்மை விட 13 வயது இளையவரான கமரூன் நாட்டவர் என்றும், அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனையில் தமது கணவரை தாம் விவாகரத்து செய்துள்ளதாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற மூதாட்டி தற்போது துனிசியா நாட்டவரான 21 வயது இளைஞரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக அறிமுகமான இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார். இருவருக்கும் ஒரே எண்ண ஓட்டம் இருப்பதாக கூறும் இவர் இதுவரை அந்த இளைஞரை நேரில் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் துனிசியா சென்ற மூதாட்டி அங்கு அந்த இளைஞரை சந்தித்து அவருடன் 5 நாட்கள் தங்கியுள்ளார். அங்கிருந்தே திருமண ஒப்பந்தம் குறித்து சுவிஸ் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை பதிவுத் திருமணம் செய்து கொண்ட மூதாட்டியின் முடிவை நீதிமன்றம் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது.
ஆனால் இந்த திருமணத்தை தாம் விரும்புவதாகவும், மூதாட்டியை தமது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தியதாகவும், வயது தமக்கு முக்கியமாக படவில்லை என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்ள தாம் விரும்பவில்லை எனவும் இந்த வாழ்க்கை தமக்கு பிடித்திருப்பதாகவும், தாம் அவருடன் வாழ விரும்புவதாகவும் அந்த துனிசிய இளைஞர் முடிவாக தெரிவித்துள்ளார்.
இருபத்து ஒன்றை மணமுடிக்க ஆசைப்படும் 71 வயது மூதாட்டி!
Reviewed by Author
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment