72 வயது பாட்டிக்கு குவா... குவா!
மாறி வரும் வாழ்க்கை முறையினால் குழந்தை பிறப்பில் பிரச்னை உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கவுர் என்ற 72 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவருடைய கணவருக்கு வயது 79. திருமணமாகி 49 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்பதால் பல்வேறு சிகிச்சைகளை இந்த தம்பதி எடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக கருவுற்று, தற்போது குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2 கிலோ ஆகும். மெனோபாஸ் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கவுர் குழந்தை பிறப்பு குறித்து கூறுகையில், " அதில் எனக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை. உடல் வலிமையோடு நலமாக இருக்கிறேன்" என்று கூறுயுள்ளார்.
72 வயது பாட்டிக்கு குவா... குவா!
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment