97 வயதிலும் தீராத ஆர்வம்: எம்ஏ தேர்வு எழுதி அசத்தல்.....
வாழ்வில் எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையே ஆகாது என பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பீகாரை சேர்ந்த 97வயதான ஒருவர் தற்போது தனது எம்ஏ தேர்வை எழுதியுள்ளார்.
பீகாரின் பரலியில் 1920-ம் ஆண்டு பிறந்த ராஜ்குமார் 1938-ஆம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் தனது பட்டத்தை பெற்றார். பின்னர் தனது வழக்கறிஞர் படிப்பை 1940-ம் ஆண்டு முடித்தார். அவருக்கு முதுகலையில் பொருளாதாரம் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்பொழுது குடும்ப பொறுப்பை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அது முடியாமல் போனது.
தற்போது 78 ஆண்டுகள் கழித்து அவரின் எண்ணம் நிறைவேறி உள்ளது. ஆம். நாலந்தா பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை பொருளாதார பட்டத்திற்காக முதல் தாளை அவர் எழுதியுள்ளார். இதுகுறித்து ராஜ்குமார் கூறும்போது, தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் தனது வயது கருதி பல மாணவர்கள் தனக்கு உதவ முன்வந்ததாகவும் அதனை அவர் மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வு அறையில் பல மாணவர்கள் தன் பேரக்குழந்தையின் வயதை விட குறைவான வயதில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு நடைபெற்ற 3 மணி நேரத்தில் ராஜ் குமார் 23 பக்க விடையை எழுதியுள்ளார்.
நாட்டில் உள்ள ஏழ்மை நிலையை பார்த்த மனம் உடைந்த அவர் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி விவாதிக்கும் முன் அதனை குறித்து தெரிந்து கொள்வதற்காக எம்ஏ பொருளாதா படிப்பை படிக்கிறார்.
97 வயதிலும் தீராத ஆர்வம்: எம்ஏ தேர்வு எழுதி அசத்தல்.....
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment