வெளியானது பிரதமர் மோடியின் கல்வித்தகுதி....
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்த நிலையில் குஜராத் பல்கலைக்கழகம், மோடி முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 62.3 சதவீத மதிப்பெண்களுடன் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்திடம் (சிஐசி) பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை வெளியிட கோரி கடிதம் அனுப்பியிருந்தார். மோடிக்கு எந்த கல்வி தகுதியும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிந்துக்கொள்ள உரிமை உள்ளது எனவும், தகவல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு இந்த தகவலை வெளியிட வேண்டும் என கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மத்திய தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி குஜராத் பல்கலைக்கழகம் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி கடந்த 1983-ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 62.3 சதவீத தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் என்றும், ஆனால் அவரது இளங்கலை பட்டம் குறித்து எந்தவித தகவலும் இல்லை எனவும் குஜராத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.என்.பட்டேல் தெரிவித்துள்ளார்.
வெளியானது பிரதமர் மோடியின் கல்வித்தகுதி....
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment