வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆர்எல்வி- டிடி விண்கலம்!
இந்தியா சொந்தமாக தயாரித்த ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலம் 1.75 டன் எடை கொண்டது.
இந்த விண்கலம், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. ஐந்து ஆண்டுகளாக, இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற விண்கலத்தை, இதுவரை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம் சென்றபின் வங்கக்கடலில் விழுந்துள்ளது. இதன் மூலம் ஆர்.எல்.வி. விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆர்எல்வி- டிடி விண்கலம்!
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment