வட மாகாண சபை அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள்
வட மாகாண சபை அமைச்சு பொறுப்புக்களில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வட மாகாண அமைச்சர்கள், ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று மாலை புதிய அமைச்சுக்களில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வட மாகாண ஆளுனர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
தற்போது, மாகாண விவசாயத்துறை, கமநல சேவை, கால்நடை கட்டுப்பாடு, நீர்பாசனம், நீர்விநியோகம், உணவு விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல், சுற்றாடல் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் செயற்படுகிறார்.
கல்வி, கலாசார நடவடிக்கை, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார மாகாண அமைச்சராக தம்பிராஜா குருகுலராஜா பதவி வகிக்கிறார்.
அத்துடன், சுகாதார மற்றும் தேசிய மருத்துவம், சமூக சேவை – புனர்வாழ்வு, சிறார் பாதுகாப்பு மற்றும் மகளீர் விவகார அமைச்சராக பத்மநாதன் சத்தியலிங்கம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த துறைகளிலேயே இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபை அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள்
Reviewed by NEWMANNAR
on
May 23, 2016
Rating:
No comments:
Post a Comment