அண்மைய செய்திகள்

recent
-

பறக்கும் போதே செயலிழந்த விமானம்: சாதுரியமாக தரையிறக்கிய விமானி....


டெல்லியின் தென்மேற்கில் Najafgarh பகுதியின் Kair கிராமத்தில், மருத்துவ விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

The AlchemistPharma Companyக்கு சொந்தமான ஏழு பேர் பயணிக்கும் வசதி கொண்ட King Air C90 விமானம் இன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.

பயணத்தின் போது விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் செயல் இழந்துள்ளது, இதை அறிந்த விமானி, டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு உதவுமாறு கோரியுள்ளார்.

எனினும். விமான் முழுமையாக செயல் இழந்ததை தொடர்ந்து Kair கிராமத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி தரையிறக்கப்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வண்டிகளும், அவசர சேவை அதிகாரிகளும் சம்பவயிடத்திற்கு விரைந்ததுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானியின் சாதுரியமான திறமையால், குறித்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், விமானத்தில் பயணித்த இரண்டு பேர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பறக்கும் போதே செயலிழந்த விமானம்: சாதுரியமாக தரையிறக்கிய விமானி.... Reviewed by Author on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.