துள்ளி குதித்து பந்தை அடித்த வீரர்: உயிர் பிரிந்த பரிதாபம்
அர்ஜென்டினாவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
மண்டல அளவிலான நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் டெபோன்சோர்ஸ் மற்றும் சான் ஜோர்ஜ் அணிகள் மோதின.
இதில், சான் ஜோர்ஜ் அணிக்காக விளையாடியமைக்கேல் பாவ்ரே (வயது 24) என்ற வீரர், பந்தை தன்வசப்படுத்த முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக எதிரணி வீரர் ஜெரோனிமோ குயன்டனாவுடன் மோதினார்.
பாய்ந்து துள்ளி குதித்த போது ஜெரோனிமோவின் கால் அவரது முகம் மீது பலமாக இடித்தது. இதில் கீழே விழுந்த பாவ்ரே பிறகு சுதாரித்து எழ முயற்சித்தார்.
இதற்கிடையே இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இன்னொரு டெபேன் சோர்ஸ் வீரர், பாவ்ரேவின் முகத்தில் குத்து விட்டு கீழே தள்ளினார்.
இதில் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த பாவ்ரேவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
இச்சம்பவம் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துள்ளி குதித்து பந்தை அடித்த வீரர்: உயிர் பிரிந்த பரிதாபம்
Reviewed by Author
on
May 24, 2016
Rating:
Reviewed by Author
on
May 24, 2016
Rating:


No comments:
Post a Comment