அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் வெற்றிகரமாக முடிந்தது நெஹ்ராவின் அறுவை சிகிச்சை,,,,


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசத்தி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நெஹ்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் சென்ற அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் இந்திய வீரரும், ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நெஹ்ரா தற்போது நலமாக இருக்கிறார். லண்டனில் அவருக்கு நேற்று இரவு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஐதராபாத் அணியில் விளையாடி வந்த நெஹ்ரா, 8 போட்டிகளில் 9 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.

டெல்லியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி வலிமை வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்திக்கிறது.

லண்டனில் வெற்றிகரமாக முடிந்தது நெஹ்ராவின் அறுவை சிகிச்சை,,,, Reviewed by Author on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.