ஆளுநரிடம் அபிவிருத்திக் கூட்டம் கூட்டுமாறு சொன்னவர்கள் யார்? அனுமதிக் கடிதம் எங்கே?--வடக்கு அமர்வில் விக்னேஸ்வரன் கேள்வி
யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினர் எம்முடன் முழுவதுமாக கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக கூறிச் சென்ற நிலையில், மேற்படி விடயத்தை வடக்கு ஆளுநர் தலைமையில் மீண்டும் கூடி ஏன் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்விலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர அபிவிருத்தி தொட ர்பாக நகர அபிவிருத்தி சபை, மாநகர சபை, மாவட்டச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் எம்முடன் சேர்ந்து உலக வங்கியின் அலுவலர்களுடன் நன்றாக பேசி
விவாதித்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்கள் தற்போது குறிப்பிட்ட வலயமைப்பு தொடர்பாகவும் சகல விடயங்களையும் கலந்தாலோசித்து உலகவங்கியிடம் அந்த விபரங்களை அனுப்பியுள்ளோhம். அது அவர்களுக்கு கிடைத்ததும் எதிர்வரும் யூன் மாதமளவில் பதில் தருவதாக கூறியுள்ளார்கள்.
இந்தநிலையில் சில உறுப்பினர்கள் கூறுவதுபோன்று நகர அபிவிருத்திசபையால் ஆளுநருக்கு அப் படியொரு கூட்டத்தை இம் மாதம் 24ஆம் திகதி நடத்துவதற்காக கடிதம் அனுப்பப்பட்டு அவர் ஊடாக எம்மிடம் இருந்துகருத்தறிந்து சொல்லுமாறு கூறியதாக எமக்கு எவரும் சொல்லவில்லை. அவ்வாறான கடிதத்தைஅனுப்பியதனால் தான் அவர்அவ்வாறுசெய்தார் என்றும் எமக்குத் தெரியாது.
உலகவங்கியோ, நகர அபிவிருத்திசபையோ எம்முடன் சேர்ந்து தான் கூட்டங்களை வைத்துள்ளார்கள்.
அதன் பின்னர் ஆளுநரிடம் கூட்டம் கூடுங்கள் என்றுசொன்னதற்கு காரணம் விளங்கவில்லை. 16 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் அந்த கூட்டம் தள்ளப்போடப்பட்டதாக கூறினார்கள். எப்போதுமறுபடி யும் கூட்டம் என்பதுதொடர்பாக ஆளு நரிடம் இருந்துஎந்தபதிலும் வர வில்லை. 23 ஆம் திகதிகாலை குறிப்பிட்ட கூட்டத்துக்கு வருமாறு எழுதிஅனுப்பினார். அதனால்தான் அன்றையதினம் சமுகமளிக்க முடியாதுள்ளதாக பதில் அனுப்பியிருந்தோம்.
இது எமக்குரியதா அரசாங்கத்துக்குரிய விடயமா என்பதை ஆராய் வது தேவையற்றவிடயம். மத்திய அரசாங்கம் எமக்கு அறிவித்து உலகவங்கியில் இருப்பவர்களை அனுப்பி அவர்களுடன் நாம் பல தடவைகள் கலந்தாலோசித்து முழுமையாக இது தொடர்பாக பேசிய பிற்பாடு எமக்கு யூன் மாதத்தில் பதில் தருவதாக கூறிவிட்டு போனார்கள்.
இந்த நேரத்தில் ஆளுநர் இப்படியான கூட்டம் வைப்பதற்கன காரணம் எமக்குபுரியவில்லை. கூட்டத்திற்கு கொழும்பில் இருந்து வருகிறார்கள் சிலர் என்ற அவசியமும் எமக்கு தெரியவில்லை நகர அபிவிருத்தி சபையின் கோரிக்கையின் பேரில் இந்த கூட்டம் கூடி யது என்றால் அக் கடிதத்தை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதற்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், ஆளுநர் அலுவல கத்தில் இருந்துவந்தகடிதத்தை வாசித்துக்காட்டினார்.
அதை கடுமையாக மறுத்த முதலமைச்சர் நகர அபிவிருத்தி சபை ஆளுநரிடம் இப்படியானதொரு கூட்டத்தை வைக்குமாறு கோரினார்களா என்பது தொடர்பான கடிதத்தை தான் நான் கேட்கிறேன் அதைக் காட்டுங்கள் என கடும்தொனியில் கூறினார்.
ஆளுநரிடம் அபிவிருத்திக் கூட்டம் கூட்டுமாறு சொன்னவர்கள் யார்? அனுமதிக் கடிதம் எங்கே?--வடக்கு அமர்வில் விக்னேஸ்வரன் கேள்வி
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment